உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

அரியாங்குப்பம்: மது குடித்ததை மனைவி தட்டி கேட்டதால், மனமுடைந்த கணவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அரியாங்குப்பம், சண்முகா நகரை சேர்ந்தவர் அருண் (எ) அந்தோணிசாமி, 28. இவர், புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டி வந்தார். மதுவுக்கு அடியாகி தொடர்ந்து குடித்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார்.இதில், மனமுடைந்த அவர் வீட்டு அருகே உள்ள மரத்தில் நேற்று துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி