உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வர் ரங்கசாமி ராஜினாமா? புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

முதல்வர் ரங்கசாமி ராஜினாமா? புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

புதுச்சேரி: சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தி அடைந்த முதல்வர் ரங்கசாமி, பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறியதால், புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.புதுச்சேரியில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி இடையே நிர்வாக ரீதியாக கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், காலியாக உள்ள சுகாதாரத் துறை இயக்குநர் பதவிக்கு துணை இயக்குநர் அனந்தலட்சுமி பெயரை முதல்வர் ரங்கசாமி பரிந்துரைத்துள்ளார். ஆனால், நேற்று மதியம், இயக்குநர் பதவிக்கு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் செவ்வேள் பெயர் வெளியானது.அதனால் அதிருப்தியடைந்த முதல்வர் ரங்கசாமி, சட்டசபையில் இருந்த சபாநாயகர் செல்வத்தை அழைத்து, 'இனி ஒத்து வராது. நான் ராஜினாமா செய்ய போகிறேன்' என கூறி, மாலையில் நடைபெற்ற கவர்னர் விழாவை புறக்கணித்து, வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.அதிர்ச்சியடைந்த செல்வம், அமைச்சர் நமச்சிவாயத்திடம் தெரிவித்து விட்டு, முதல்வர் வீட்டிற்கு சென்றார். அமைச்சர் நமச்சிவாயம், கவர்னரை சந்தித்து பேசிவிட்டு, பின், முதல்வர் வீட்டிற்கு சென்றார்.அங்கு ஏற்கனவே காத்திருந்த செல்வத்துடன் சேர்ந்து, முதல்வரை சமாதானப்படுத்தினர். ரங்கசாமி சமாதானமடையாததால், இருவரும் விரக்தியுடன் புறப்பட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

R Venkatasamy
ஜூலை 09, 2025 22:16

யாரை போட்டால் முதல்வருக்கு என்ன பிரச்சினை ஏன் இந்த அளவிற்கு கோபம் ஐந்து ஆண்டு முடிய போகின்றது ஒரு முறை கூட டில்லி செல்லாமல் இங்கேயே சுற்றி கொண்டு இருக்கின்றார். மத்திய அரசை எதிர்த்து போட்டியிடும் தமிழக முதல்வரே நிதி ஆயித் குழு மீட்டிங் செல்லும் பொழுது இவர் ஏன் செல்லவில்லை. கொள்கை இல்லாத கட்சி என்.ஆர்.காங்கிரஸ்.தனது கட்சியில் உழைத்தவர்களுக்கு சீட்டு கொடுக்காமல் காங்கிரஸ் கட்சியில் சீட்டு வாங்கி வைத்து இருந்தவர்கள் அழைத்து சீட்டு கொடுத்தவர் தானே இந்த முதல்வர். இவருக்கு ஏன் இந்த கோபம் விதியை மீறி யாரை எந்த பதவியில் வேண்டுமானலும் நியமிப்பார்.


Ilambaruthi Jayabalan
ஜூலை 09, 2025 15:46

இந்த புதுச்சேரி சட்டத்தின் படி இங்கு முதல்வரை விட ஆளுநர் அவர்களுக்கு தான் முக்கியத்துவம். ஆனால் அதை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.


அப்பாவி
ஜூலை 09, 2025 11:18

சீக்கிரமே பா.ஜ இவரை இட விட்டு வேடிக்கை பார்க்கும்.


P. SRINIVASAN
ஜூலை 09, 2025 10:18

சங்கி உள்ளவரை பாண்டிச்சேரியில் என்னவேண்டுமானாலும் நடக்கும்.


kannane
ஜூலை 09, 2025 16:09

லுங்கி அங்கிகள் இருக்கும் வரை சங்கிகள்அசுர வளர்சி பெருவார்கள்.


sathyamurthy
ஜூலை 09, 2025 05:53

விஜயுடன் கூட்டணிக்கு சிக்னலாக இருக்கலாம்.


தாமரை மலர்கிறது
ஜூலை 09, 2025 01:38

ரங்கசாமி ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கவர்னர் சொல்வதை ஏற்றுக்கொள்வது நல்லது. இல்லையெனில் ரங்கசாமி ராஜினாமா செய்வது நல்லது.


முருகன்
ஜூலை 09, 2025 08:57

இதேபோல் டெல்லி, உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் கவர்னர் சொல்வதை கேட்க சொல்லுங்கள் பார்க்கலாம்


Raj
ஜூலை 10, 2025 08:10

தமிழ் நாட்டில் இப்படித்தான் நடந்தது.


Tiruvarur Tamil Nadu Indian
ஜூலை 09, 2025 01:34

அதிமுக கவனத்திற்கு.


சமீபத்திய செய்தி