உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திறந்தவெளி பாராக மாறும் ெஹலிபேடு மைதானம் விரட்டியடிக்குமா லாஸ்பேட்டை போலீஸ்

திறந்தவெளி பாராக மாறும் ெஹலிபேடு மைதானம் விரட்டியடிக்குமா லாஸ்பேட்டை போலீஸ்

லாஸ்பேட்டை மைதானத்தில் தினமும் காலையிலும், மாலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாக்கிங், உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். பொதுமக்களின் வசதிக்காக ைஹமாஸ் விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது. நல்ல நிலையில் இருக்கும் ெஹலிபேடு மைதானத்தை அலங்கோலமாக்கும் வகையில் தற்போது சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.பொழுது சாய்ந்ததும் குடிமகன்கள், சமூக விரோதிகள் அனைத்து சாலைகளிலும் மதுபாட்டிலுடன் அமர்ந்து விடுகின்றனர். ஆற அமர உட்கார்ந்து மணிக்கணக்கில் குடிக்கின்றனர். அப்படியே தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகள், பாட்டீல்கள், கைப்பைகள், உணவு பொருட்களின் எச்சங்களை அப்படியே வீசி செல்கின்றனர். இதனால் மைதானம் சுற்றிலும் மீண்டும் குப்பைமேடாகி, அலங்கோலமாக காட்சியளிக்கிறது.ெஹலிபேடு மைதானம் முழுதும் பீர், விஸ்கி, பிராந்தி பாட்டீல்கள், பிளாஸ்டிக் கப்புகள், கேரி பேக்குகள், ஐஸ்கீரிம் கப்புகள், கேக் அட்டை பெட்டிகள், டீ கப்புகள், ஹான்ஸ், சிகரெட் உள்ளிட்ட போதை பாக்கெட்கள் முகம் சுளிக்கும் வகையில் சிதறி கிடக்கின்றன.இவை விளையாட வரும் சிறுவர்களையும் திசை திருப்பிவிடுகின்றன. கிரிக்கெட் விளையாட ஸ்டெம்ப் இல்லையெனில், மைதானத்தில் சிதறி கிடக்கும் மதுபாட்டீல்களை ஸ்டெம்ப் போல் நட்டு விளையாடுகின்றனர். அந்த அளவிற்கு விளையாட வரும் மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் சர்வ சாதாரணமாக மதுபாட்டில்கள் கையில் கிடைக்கின்றன. கையில் கிடைத்த மதுபாட்டில்களை, நாளைக்கு அவர்கள் வாயில் வைத்து சுவைத்து பார்க்கும் நாட்களும் வெகு தொலைவில் இல்லை. இதற்குமேலும், லாஸ்பேட்டை போலீசார் தங்களது கடைமை உணர்ந்து ரோந்து சென்று தடுக்காவிட்டால், ெஹலிமேடு மைதானம் முழு நேர திறந்தவெளி பாராக மாறி, ஊறுகாய், சைடீஸ் கடைகளும் முளைத்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ