வேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண் கைது
அரியாங்குப்பம் : நகைகளை திருடி, அதே வீட்டில் வேலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அரியாங்குப்பம், சீனிவாசா அப்பாட்மென்ட்டை சேர்ந்தவர் சுந்தர் மனைவி அனிதா, 35; அக்கவுண்டண்ட். இவரது வீட்டில், இருந்த அலமாரியில், வைத்திருந்த 4.5 சவரன் நகைகள், கடந்த ஜூன் மாதம் காணாமல் போயின.இதுகுறித்து, அவர், அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில், அனிதா வீட்டில், வேலை செய்த, பாகூரை சேர்ந்த வள்ளி, 43; என்பவரிடம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன், மற்றும் போலீசார் விசாரித்தனர். அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், நகைகளை திருடி சென்றதும், நகைகளை அரியாங்குப்பம், பாகூர் ஆகிய பகுதியில் உள்ள அடகு கடையில் வைத்து பணம் வாங்கியதும் தெரியவந்தது. அடகு கடையில் இருந்த நகைகளை போலீசார் மீட்டு, நேற்று வள்ளியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.