உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் விசாரணையின்போது மயங்கி விழுந்த பெண் சாவு

போலீஸ் விசாரணையின்போது மயங்கி விழுந்த பெண் சாவு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணையின்போது மயங்கி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த ஒதியடிக்குப்பத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி மங்கலட்சுமி,58; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வரதராஜ் என்பவருக்கும் இடையே வயலில் மாடு கட்டியது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து, இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். இரவு போலீஸ் ஸ்டேஷன் வந்த மங்கலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார்.அவரை, நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினர்கள் துாக்கி சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரை செய்தார்.கடலுார் அரசு மருத்துமனையில் டாக்டர் பரிசோதனை செய்தபோது, மங்கலட்சுமி வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது.இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். நடுவீரப்பட்டில் போலீஸ் விசாரணையின்போது மயங்கி விழுந்த பெண் இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை