உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விரக்தியில் பெண் தற்கொலை

விரக்தியில் பெண் தற்கொலை

புதுச்சேரி: கணவர் இறந்த விரக்தியில் இருந்த பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி சொக்கநாதன்பேட்டை தெற்கு அணைக்கரை வீதியை சேர்ந்தவர் குமார், இவர் கடந்த 5 ஆண்டுக்கு முன் இறந்துள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி,44; தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த இவர் கணவர் இறந்ததில் இருந்து மனமுடைந்த நிலையில் இருந்துவந்தார். கடந்த மூன்று நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இரண்டு மகன்கள் வெளியில் சென்றிந்த போது, வீட்டு அறையில், புவனேஸ்வரி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புவனேஸ்வரியின் மகன் சந்தோஷ் கொடுத்த புகாரின் பேரில், டி நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை