உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி ரூ.95 ஆயிரம் இழந்த பெண்

இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி ரூ.95 ஆயிரம் இழந்த பெண்

புதுச்சேரி : இன்ஸ்டாகிராம் பகுதிநேர வேலை வாய்ப்பு விளம்பரத்தை நம்பி, ரூ. 95 ஆயிரத்தை புதுச்சேரி பெண் இழந்துள்ளார்.வில்லியனுாரை சேர்ந்தவர் அக் ஷயா. இவர் இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை பார்த்தார்.அதில் இருந்த வாட்ஸ் ஆப் எண்ணை அக் ஷயா தொடர்பு கொண்ட போது, எதிர்முனையில் பேசிய மர்மநபர் பகுதி நேர வேலைக்கு செயலாக்க கட்டணம்செலுத்த வேண்டுமென கூறினார். இதைநம்பிய அவர், 95 ஆயிரம் ரூபாய் அனுப்பி, ஏமாந்துள்ளார்.முத்தியால்பேட்டையை சேர்ந்த பாரதி என்பவரின் கிரெடிட் கார்டில் இருந்து 84 ஆயிரத்து 721, மூலகுளத்தை சேர்ந்த திவகர் கிரெடிட் கார்டில் இருந்து 38 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர்.இதேபோல், ஒதியஞ்சாலை பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் 11 ஆயிரம், காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த எழிலன் 10 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 5 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 721 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை