மேலும் செய்திகள்
சிறுமி மாயம்; தந்தை புகார்
12-Sep-2024
புதுச்சேரி: ஊனமுற்ற மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.அரும்பார்த்தபுரம் பேட்டைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, 35; பிறவிலியே இடது கை, கால் ஊனமுடையவர். இவருக்கு திருமணமாகி 6 வயதில் மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த கலைச்செல்வி, கடந்த 9ம் தேதி மாலை மளிகை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை வாசுதேவன் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
12-Sep-2024