உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணுக்கு கொலை மிரட்டல்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

பாகூர்: வீட்டு மனை எல்லை பிரச்னையில், பெண்னை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகூர் அடுத்துள்ள குடியிருப்புபாளையம் சுப்பையா நகரை சேர்ந்தவர் கருணாநிதி மனைவி ஜெயந்தி, 50; இவர்களுக்கும், இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ராதா குடும்பத்திற்கும் இடையே இடம் தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இது குறித்து மனு அளித்ததன் பேரில் ் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இடத்தை அளவீடு செய்து, இரு வீட்டிற்குமான எல்லை கல் நட்டு விட்டு சென்றனர். கடந்த 4ம் தேதி, ஜெயந்தி தனக்கு சொந்தமான இடத்தில் இரும்பு வேலி அமைத்துள்ளார். இதற்கு, ராதா தரப்பினர், எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது மருமகள் யோவான் தடுப்பு வேலியை பிடுங்கி சேதப்படுத்தி, ஜெயந்தியை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஜெயந்தி புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை