உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகளிர், விவசாயிகள் கலந்துரையாடல்

மகளிர், விவசாயிகள் கலந்துரையாடல்

புதுச்சேர : புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், மகளிர் விவசாயிகளுடன் கலந்து உரையாடல் நிகழ்ச்சிஏம்பலம் தனியார் திருமண நிலையத்தில் நடந்தது.வேளாண் அலுவலர் தினகரன் வரவேற்றார். துறை இயக்குனர் வசந்தகுமார், விவசாயத்தில் பெண்களின் செயல்பாடுகள், அவர்களின்முன்னேற்றம் குறித்தும், கூடுதல் இயக்குனர் ஜாகிர் உசேன்ஆத்மா திட்டத்தின் மூலம் பெண்களுக்கான திட்டம் குறித்தும் பேசினர்.இணை இயக்குனர் சிவபெருமான், சிறுதானியங்கள்உற்பத்தி செய்து, அதை விற்பனை செய்வது குறித்து பேசினார். ஆத்மா திட்ட துணை இயக்குனர் கலைச்செல்வி பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நினைவு பரிசுகள் வழங்கினார். துணை இயக்குனர் குமாரவேல் சோப்பு தயாரிப்பதுகுறித்து செயல் விளக்கம் அளித்தார். 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை அலுவலர் கிருஷ்ணன், ஊழியர்கள் செய்திருந்தனர். கால்நடை மருத்துவர் செல்வமுத்துநன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை