உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மகளிர் தின விழா கொண்டாட்டம்

 மகளிர் தின விழா கொண்டாட்டம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பாலின விழிப்புணர்வுமற்றும் மகளிர் தின விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் கருப்புசாமி தலைமை தாங்கினார். தமிழ் துறைத் தலைவர் ரேவதி வரவேற்றார். புதுச்சேரி அரசுதொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குனர் ராம்குமார் சுகுமாரன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக லட்சுமி நாராயணா மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மனநல மருத்துவர் அஸ்வினி அனுக்கிரஹா பங்கேற்று பேசினார். தமிழ்த்துறை பேராசிரியர் கண்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கல்லுாரியில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் சாந்தி, அகிலா, அலுவலக ஊழியர்கள் சரசு, சரோஜா ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக கல்லுாரி பேராசிரியர்கள், மாணவிகள், ஒருங்கிணைந்து மகளிர் உரிமைகளை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சுனிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ