மதகடிப்பட்டு வார சந்தை மேம்படுத்தும் பணி துவக்கம்
திருபுவனை: மதகடிப்பட்டு வார சந்தை வளாகத்தை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. திருபுவனை தொகுதி, மதகடிப்பட்டில், 100 ஆண்டுகள் பழமையான அரசுக்கு சொந்தமான வார சந்தை, வாரந்தோறும் செவ்வாய்கிழமை அன்று செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை வளாகத்தை மேம்படுத்த அங்காளன் எம்.எல்.ஏ., தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10.90 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அதனைத் தொடர்ந்து சந்தை வளாக மேம்பாட்டு பணியை நேற்று அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், உதவிப் பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் மனோகரன், ஒப்பந்ததாரர் பழனிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.