உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

புதுச்சேரி: முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் பழனிவேல்,44. இவர் கடந்த மாதம் 30ம் தேதி கேபிள் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர், கதிர்காமம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ளாமல் மது குடித்து வந்தார். நேற்று (நவ.,6) காலை வீட்டு வாசலில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் வரும் வழிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை