உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்டையில் விழுந்து தொழிலாளி சாவு

குட்டையில் விழுந்து தொழிலாளி சாவு

காரைக்கால்: காரைக்காலில் குட்டையில் விழுந்து பனை ஏறும் தொழிலாளி உயிரிழந்தார்.காரைக்கால், கோட்டுச்சேரி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது இளைய மகன் கிருஷ்ணராஜ், 24; பனை ஏறும் தொழிலாளி. நேற்று முன்தினம் வெளியே சென்ற கிருஷ்ணராஜ் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குட்டை தண்ணீரில் கிருஷ்ணராஜ் இறந்த நிலையில் மிதந்தார். இதுக்குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ