மேலும் செய்திகள்
கார் மோதி தொழிலாளி பலி
24-Nov-2024
பாகூர் : முருங்கப்பாக்கம் அடுத்த கொம்பாக்கம், பாப்பான்சாவடியைச் சேர்ந்தவர் சிவபாலன் 24; கட்டட தொழிலாளி. இவர் நேற்று காலை கிருமாம்பாக்கத்திற்கு வேலைக்கு வந்தவர், பின், தனது பைக்கில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.அரியாங்குப்பம் டோல் கேட் பகுதி அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்று அவரை முந்தி செல்ல முயன்றது.அந்த பஸ்சின் படிகட்டு பகுதி, பைக்கின் மீது மோதியதால், அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்து, பஸ் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்து வந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சிவபாலனின் உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
24-Nov-2024