கார் மோதி தொழிலாளி பலி
கோட்டக்குப்பம்: சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி கார் மோதி இறந்தார்.கோட்டக்குப்பம் அடுத்த குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் ராமு, 55; கூலித்தொழிலாளி. இவர், நேற்று பெரிய முதலியார்சாவடி பகுதியிலுள்ள ஈ.சி.ஆர். சாலையை கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் மோதியதில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.