உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலக சுற்றுச்சூழல் தினம் பா.ஜ., மரக்கன்றுகள் நடல்

உலக சுற்றுச்சூழல் தினம் பா.ஜ., மரக்கன்றுகள் நடல்

புதுச்சேரி: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, உழவர்கரை மாவட்ட பா.ஜ., சார்பில், மரக்கன்றுகள் நடும்விழா புதுப்பேட்டை கோலக்கார அரங்கசாமி நாயக்கர் நடுநிலைப் பள்ளியில் நடந்தது.பா.ஜ., கல்வியாளர் பிரிவின் மாநிலத் தலைவர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். உழவர்கரை மாவட்டத் தலைவர் உலகநாதன், தட்டாஞ்சாவடி தொகுதி துணைத் தலைவர் மேகநாதன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக பா.ஜ., மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி., மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி தலைவர் ராமு, மாநில செயலாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் பிரவின்குமார், லாஸ்பேட்டை தொகுதித் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பா.ஜ., தலைவர் செல்வகணபதி பள்ளி மாணவிகளுக்கு உயர்ரக மரக்கன்றுகளை வழங்கி, பள்ளியில் நட்டு அதற்கு அந்தந்த மாணவிகளின் பெயரை சூட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி