உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சேலியமேடு பள்ளியில் உலக ஓசோன் தினம் 

சேலியமேடு பள்ளியில் உலக ஓசோன் தினம் 

பாகூர்: சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில், உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது. சமுதாய நலப்பணி திட்டத்தின் சார்பில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் லிங்குசாமி தலைமை தாங்கினார். சமுதாய நலத் திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், ஓசோன் தினத்தை பற்றி நோக்கவுரையாற்றினார். சமுதாய நலப்பணித் திட்ட மாணவர்கள் ‘ஓசோன் தினத்தை’ விளக்குவதற்கான குறும்பட செயல்பாட்டில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமுதாய நலப்பணித் திட்ட அலுவலர் ஆசிரியர் வெரோனஸ் விஜயலட்சுமி செய்திருந்தார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்