மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக 'பார்மசிஸ்ட்' தினம்
25-Sep-2026
புதுச்சேரி: கோரிமேடு அரசு மருந்தகத்தில், உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில், தலைமை விருந்தினராக, அரசு மருந்தக தலைவர் திருமலை சங்கர் கலந்து கொண்டு, ‘ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக மருந்தாளர்களை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் பேசுகையில் ‘மருந்துகளுக்கும், நோயாளர் பாதுகாப்பிற்கும் இடையே மருந்தாளுநர்கள் இன்றியமையாத இணைப்பாக விளங்குகின்றனர். தொடர் கற்றல், பிற சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்த குழுப்பணி, தொழில்நுட்பத்தின் பொறுப்பான பயன்பாடு ஆகியவையே இத்தொழிலின் எதிர்காலத்தை வடிவமைக்கும்’ என்றார். மேலும், புதிதாக பணியில் சேர்ந்த மருந்தாளுநர்களிடம், நோயாளர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும், மருந்து வழங்குதல் மற்றும் மருந்து இருப்பு மேலாண்மையில் துல்லியத்துடனும் பொறுப்புடனும் செயல்படவும், தங்கள் அறிவைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளவும், ஒவ்வொரு நோயாளிக்கும் நேர்மையுடனும் கனிவுடனும் சேவையாற்றிட வேண்டும், என அறிவுறுத்தினார். புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மருந்தாளுநர் பூஜா, ‘மருந்தாளுநர்களை வலுப்படுத்துதல் என்பது அறிவும் திறனும், அங்கீகாரம், வாய்ப்புகள், தொழில்நுட்ப வசதி, ஆதரவான பணிச்சூழல், சுகாதாரக் குழுவுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது’ என்றார். புதிதாகப் பணியில் சேர்ந்த மருந்தாளுநர்கள் வரவேற்கப்பட்டு, அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரியின் பல்வேறு சுகாதார நிலையங்களைச் சேர்ந்த சுமார் 30 மருந்தாளுநர்கள் கலந்துகொண்டனர்.
25-Sep-2026