உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலக பிசியோதெரபி தின மருத்துவ முகாம்

உலக பிசியோதெரபி தின மருத்துவ முகாம்

புதுச்சேரி : உலக பிசியோதெரபி தின விழாவை முன்னிட்டு, புதுச்சேரி லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லுாரி மற்றும் பிசியோதெரபி கல்லுாரி சார்பில் காந்தி சிலை அருகே மருத்துவ முகாம் நடந்தது. காந்தி திடலில் நடந்த முகாமில், பொது மருத்துவம், எலும்பு மூட்டு மருத்துவம், இயன் முறை மருத்துவம் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் உடற்பயிற்சி முக்கியத்துவம் குறித்து இயன்முறை மருத்துவர்களால் பொதுமக்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவக் கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் ஆசையாஸ் போஸ்கோ, நிர்வாக இயக்குநர் அன்பு, பிஸியோதெரபி கல்லுாரி முதல்வர் வேல்முருகன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை