வியட்நாமில் உலகத் தமிழர் மாநாடு
புதுச்சேரி : தமிழர்களின் வரலாறு, கலை பண்பாடு, வணிகம் ஆகியவற்றை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில், வியட்நாம் நாட்டில் உலகத் தமிழர் மாநாடு வரும் ஜன., 25, 26ம் தேதிகளில் நடக்கிறது.இதுகுறித்து பன்னாட்டு தமிழர் நடுவம் தலைவர் தணிக்காசலம் அளித்த பேட்டி:தமிழர்களோடு நெருக்கமான வரலாற்று தொடர்பு கொண்ட வியட்நாம் நாட்டில் உள்ள டனாங் நகரில், பன்னாட்டு தமிழர் நடுவம் சார்பில், உலக தமிழர் மாநாடு வரும் ஜனவரி 25, 26ம் தேதிகளில் நடக்கிறது.மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழர்கள் கலந்து கொள்கின்றனர்.மாநாட்டில் 26ம் தேதி தமிழர்களின் வர்த்தகம் மேம்படுவதற்கான கலந்துரையாடல் அமர்வுகள் நடக்கிறது. அதில், சிறந்த ஆளுமைக்காக 10 பேர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. மாநாட்டில் உலக நாடுகளிலிருந்து சிறந்த கல்வியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், வணிக தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.மாநாட்டு துவக்க விழாவிற்கு, மத்திய, மாநில அமைசர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வியட்நாமுக்கும் தமிழர் களுக்கும் உள்ள தொடர்பு கள் பற்றிய ஆவணப்படம், மாநாட்டில் திரையிடப்படுகிறது. மேலும், மாநாட்டில் ஆய்வு அடிப்படையிலான கட்டுரைகள் அடக்கிய மாநாட்டு மலர் தயாரிக்கப்படவுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் மலருக்கு கட்டுரைகளை அனுப்பலாம். மாநாட்டின் தொடர்பான விபரங்களுக்கு www.tamilarmaanadu.comஎன்ற இணைய தளத்திலும், 90921 91111 மொபைல் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக பன்னாட்டு தமிழர் நடுவம் சார்பில் வியட்நாம் நாட்டில் வரும் ஜன., 25ம் தேதி துவங்கும் உலகத் தமிழர் மாநாட்டிற்கான லோகோ வெளியிடப்பட்டது.