உலக தமிழர் பொருளாதார மாநாடு; மாஜி சபாநாயகர் பங்கேற்பு
புதுச்சேரி ; உலக தமிழர் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றதால், பல அனுவங்கள் கிடைத்துள்ளது என முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்தார்.அவர் மாநாட்டில் பேசியதாவது:மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடந்த, 11வது உலக தமிழ் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றது பல அனுபவங்களும், நட்புகளும் கிடைத்துள்ளது. மாநாட்டின் நிறுவன தலைவர் சம்பத், மூலம் மாநாட்டில், பல நாட்டின் தொழில் வளத்தையும், பல தொழில் அதிபர்களின் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.ஒரு நாட்டின் வளர்ச்சியே, வணிகத்துறையின் மூலம் உருவாகும் பொருளாதார வளர்ச்சி ஆகும். இன்றைக்கு நாடு வளமாக இருக்க, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தாக வேண்டும். படித்த இளைஞர்கள் வேலை தேடி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணாமல், பலருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி தருகின்ற அளவுக்கு சிந்திக்க வேண்டும்.தொழில் துவங்க தான், ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கும், பிரஞ்சுகாரர்கள் புதுச்சேரிக்கும் வந்தனர். புதுச்சேரி அரசு தொழில் தொடங்கி வளப்படுத்த பல்வேறு சலுகைகள் செய்து கொடுக்க தயாராக உள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.தன் பெற்றோர் வைத்த பெயரை காட்டிலும் தன்னால் உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் பெயரே நம்மை அடையாள படுத்தி பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.