உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வள்ளலார் சபையில் தீபம் ஏற்றி வழிபாடு

 வள்ளலார் சபையில் தீபம் ஏற்றி வழிபாடு

புதுச்சேரி: முதலியார்பேட்டை வள்ளலார் சபையில் உலக நன்மை வேண்டி தீப வழிபாடு நடந்தது. நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், வடலுார் வள்ளலார் சபை தலைமை கொள்கை பரப்பு செயலாளர் கோதண்டபாணி, கவுரவ தலைவர் சஜிதா, தலைவர் நித்யா, பொருளாளர் வடிவு ஆகியோர் கலந்து கொண்டு, உலக நலம் வேண்டி ஆன்மிக சொற்பொழிவு நடத்தினர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு உலக நலம் வேண்டி தீபம் ஏற்றி வழிப்பட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முதலியார்பேட்டை வள்ளலார் சபை சன்மார்க்க சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ