இரும்பை பாலா திரிபுரசுந்தரி கோவிலில் யாகசாலை பூஜை நாளை துவக்கம்
புதுச்சேரி : இரும்பை பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை பூஜை நாளை துவங்குகிறது.புதுச்சேரி - திண்டிவனம்தேசியநெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில்பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, ஸ்ரீராஜ மாதாங்கி மற்றும் ஸ்ரீவாராஹி பரிவார மூர்த்திகள் அமைக்கப்பட்டது. அதனையொட்டி, வரும் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.இதற்கான பூர்வாங்க பூஜைகடந்த 31ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை யாகசாலை பிரவேச பலி நடந்தது. நேற்று காலை நவக்கிரக ஹோமம், அஸ்வ பூஜை, பூர்ணாஹூதி, மாலை வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது.இன்று 3ம் தேதி காலை 9:00 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு மிருத்சங்கராஹணம், அங்குரார்ப்பணம் ரக்ஷபந்தனம், கவுதுக யாகம் நடக்கிறது.நாளை 4ம் தேதி காலை மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், தீர்த்தசங்ரஹணம், அக்னி சங்க்ரஹணத்தை தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.5ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, 6ம் தேதி நான்கு மற்றும் 5ம் கால யாக பூஜை நடக்கிறது. 7ம் தேதி காலை 5.00 மணிக்கு விசேஷ சாந்தி விக்னேஸ்வர பூஜை, அங்குர பூஜை, 6ம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், யாத்ரா ஹோமத்தை தொடர்ந்து கலசம் புறப்பாடாகிறது.காலை 9:20 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் பரிவார விமானங்களுக்கும், 9:40 மணிக்கு பாலா திரிபுர சுந்தரி அம்பாளுக்கும், 9:50 மணிக்கு ஸ்ரீராஜ மாதங்கி அம்பாளுக்கும், 10 மணிக்கு ஸ்ரீவாராஹி அம்பாளுக்கும், 10:05 மணிக்கு பால பைரவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.மாலை 5:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம், உபசாரத்தை தொடர்ந்து கன்யா பூஜை, தருணி பூஜை, சுவாஷினி பூஜை, வடுக பூஜை, தீபாராதனை மற்றும் உற்சவ மூர்த்திகள் உள்புறப்பாடு நடக்கிறது.