உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஹெலிபேடு மைதானத்தில் யோகா பயிற்சி துவக்கம்

ஹெலிபேடு மைதானத்தில் யோகா பயிற்சி துவக்கம்

புதுச்சேரி : லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் உழவர்கரை நகராட்சி சார்பில், இலவச யோகா பயிற்சியை ஆணையர் சுரேஷ்ராஜ் துவக்கி வைத்தார்.உழவர்கரை நகராட்சி சார்பில், வெங்கட்டா நகர் பூங்காவில் ஆயுஷ்துறை சார்பில், யோகா பயிற்றுநர்களை கொண்டு, பொதுமக்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, பொதுமக்களின் நலன் கருதி, அதனை மேலும் விரிவுப்படுத்தும் பொருட்டு, வாரந்தோறும் ஞாயிற்றுகிழமைகளில் காலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் ஆயுஷ் துறையுடன் இணைந்து இலவச யோகா பயிற்சி அளிக்க உழவர்கரை நகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி, கடந்த ஞாயிற்று கிழமை நடந்த யோகா பயிற்சியை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் துவக்கி வைத்தார். இதில், 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.யோகா பயிற்சி வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் ஹெலிபேடு மைதானத்தில் தொடர்ந்து நடைபெற உள்ளதால், பொதுமக்கள் பங்கு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ