உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காதலி பேசாததால் வாலிபர் தற்கொலை

காதலி பேசாததால் வாலிபர் தற்கொலை

அரியாங்குப்பம்: காதலி பேசாததால், மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.அரியாங்குப்பம் இருசாம் பாளையம் ரோடு, அருந்ததிபுரத்தை சேர்ந்தவர் சேகர் மகன் ராஜன், 26; பட்டப்படிப்பு முடித்து, அரசு வேலைக்காக பயிற்சி எடுத்து வந்தார். இவர், காதலித்த பெண், சில தினங்களாக ராஜனுடன் பேசவில்லை. இதனால், மன உளைச்சலில் இருந்த ராஜன், நேற்று முன்தினம், வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ