திருமணத்திற்கு உறவினர்கள் எதிர்ப்பு வாலிபர், விதவை பெண் தற்கொலை
காரைக்கால் : காரைக்காலில், திருமணததிற்கு உறவினர்கள் மறுத்ததால், வாலிபர், விதவை பெண் இருவரும் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.காரைக்கால், மஸ்தான் பள்ளி வீதியை சேர்ந்தவர் காயத்ரி, 38; வீட்டில் இட்லி கடை நடத்தி வந்தார். இவரது கணவர் மாணிக்கம் கடந்த ஒராண்டுக்கு முன் உடல்நலமின்றி இறந்துவிட்டார். மகன் கணேஷூடன் தனியாக வசித்து வசித்து வந்தார்.இந்நிலையில், காயத்ரிக்கும் உறவினரான காளிதாஸ், 31, என்பருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கு, காளிதாஸ் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், காளிதாசுக்கு திருமணம் செய்து வைக்க வேறு பெண்ணை பார்த்துள்ளனர்.இதனால், மனமுடைந்த காளிதாஸ் கடந்த 12ம் தேதி இரவு 9:30 மணியளவில் காயத்ரி வீட்டிற்கு சென்று, பேனில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, பரிசோதித்த டாக்டர், காளிதாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த காயத்ரி, காளிதாஸ் துாக்கு போட்டு கொண்ட, அதே பேனில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து காரைக்கால் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருமணத்திற்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததால், மனமுடைந்த இருவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.