உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.ஆர்.டி.சி., பஸ் கண்ணாடி உடைப்பு: வாலிபர் கைது

பி.ஆர்.டி.சி., பஸ் கண்ணாடி உடைப்பு: வாலிபர் கைது

புதுச்சேரி: பி.ஆர்.டி.சி., பஸ்சின் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் மூலம் பி.ஆர்.டி.சி., பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு 8:30 மணிக்கு பி.ஆர்.டி.சி., புதுச்சேரியில் இருந்து வீராம்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சை பின்தொடர்ந்து பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் முந்திச் செல்ல முயன்றார்.மரப்பாலம் வரை அவரால் பஸ்சை முந்தி முடியவில்லை. ஆத்திரமடைந்த அந்த வாலிபர், மரப்பாலம் பஸ் நிறுத்தத்தில் நின்ற, பஸ் முன்னாடி பைக்கை நிறுத்தி டிரைவர் ராஜ்மோகனிடம் தகராறில் ஈடுப்பட்டார்.ஆத்திரமடைந்த வாலிபர் கருங்கல்லை வீசி பஸ்சின் பின் பக்க கண்ணாடியை உடைத்தார். அங்கிருந்த போலீசார் அந்த வாலிபரை முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும், அவர் குடிபோதையில் பஸ்சை முந்தச் சென்றது தெரியவந்தது.டிரைவர் ராஜ்மோகன் புகாரின் பேரில் விக்னேஷ் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை