மேலும் செய்திகள்
ஓட்டளித்த கல்பாக்கம் மீனவர்கள்
23-Apr-2026
காரைக்கால்: காரைக்காலில் கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால், திருப்பட்டினம், படைவெட்டி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள வடகட்டளை தெருவில் நேற்று முன்தினம் பொது இடத்தில் வாலிபர் ஒருவர் கத்தியை கையில் வைத்துக் கொண்டு, சாலையில் செல்வோரை அச்சுறுத்தி வகையில் நடந்து கொண்டார். அப்போது ரோந்து வந்த போலீசார், அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், திருப்பட்டினம் வடகட்டளை தெருவை சேர்ந்த ஹரிஹர சுதன், 25, என, தெரியவந்தது. அவர் மீது திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். கத்தியை பறிமுதல் செய்தனர்.
23-Apr-2026