உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது

 பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது

நெட்டப்பாக்கம்: மடுகரையில் பொது மக்களுக்கு இடையூறு செய்த போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர். மடுகரை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது விழுப்புரம் மாவட்டம், ப.வில்லியனுார் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன், 23, என்பவர், மதுபோதையில் மடுகரை ஒழுங்கு முறை விற்பனை கூடம் எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். தகவலறிந்த போலீசார், அங்கு விரைந்து சென்று, அரவிந்தன் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி