உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கத்தியுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது

 கத்தியுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது

புதுச்சேரி: கத்தியுடன் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். கரசூர் மயானத்தில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்தும் அந்த வாலிபர் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து, போலீசார் விசாரித்தனர். அவர், வில்லியனுார், சுல்தான்பேட்டைச் சேர்ந்த முகமது இர்பான், 21, என்பதும் இவர், முன்விரோதத்தில் எதிரியை பழிவாங்க கத்தியுடன் காத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை