மேலும் செய்திகள்
பெண்களை கிண்டல் செய்த வாலிபர் கைது
27-Jun-2025
அரியாங்குப்பம் : பொது இடத்தில் மது போதையில், ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அரியாங்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் இரவு அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில் ரோந்து சென்றனர். அங்கு மது போதையில் வாலிபர் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறாக, ஆபாசமாக பேசி கொண்டிருந்தார்.அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். வில்லியனுார் ஆரணி தெருவை சேர்ந்த மாரிமுத்து, 30, என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிந்து, போலீசார் கைது செய்தனர்.
27-Jun-2025