உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கஞ்சா விற்பனை வாலிபர் கைது

 கஞ்சா விற்பனை வாலிபர் கைது

பாகூர்: பாகூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பாகூர் அடுத்த குருவிநத்தம் பகுதியில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் பாகூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். குருவிநத்தம் அய்யனார் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். குருவிநத்தம் புதுநகர் பகுதியைச் சேர்ந்த நடராஜ், 29; என்பதும், அவரை சோதனை செய்ததில், கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை