உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் திருடிய வாலிபர் கைது

பைக் திருடிய வாலிபர் கைது

திருபுவனை: திருபுவனை அருகே பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, கொளத்துாரை சேர்ந்தவர் வெங்கடேசன், 34. இவர், புதுச்சேரி, மதகடிப்பட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் வந்திருந்தார். அப்போது அவரது பைக் மற்றும் 2 மொபைன் போன்கள் திருடுபோனது. புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.நேற்று காலை திருபுவனை தொழிற்பேட்டை கொத்தபுரிநத்தம் சாலையில் சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர் புதுச்சேரி அரியூர் அடுத்த சிவராந்தகம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தேவன் 24; என்பதும், அவர் ஓட்டி வந்ததது திருட்டு பைக் என்பதும் தெரிய வந்தது. பைக் மற்றும் இரண்டு மொபைல் போன்களை மதகடிப்பட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.இதையடுத்து தேவனை கைது செய்த போலீசார், பைக் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். அவரை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி