உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கத்தியை காட்டி மக்களை மிரட்டிய வாலிபர் கைது

 கத்தியை காட்டி மக்களை மிரட்டிய வாலிபர் கைது

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை போலீசார் நேற்று மதியம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். லாஸ்பேட்டை, அணைக்கரை மேடு, சிங்கம் பார்க் அருகே கத்தியுடன் ஒரு வாலிபர் பொது மக்களை மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பியோட முயன்றார். அவரை, போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், லாஸ்பேட்டை, சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த பாலு மகன் வினோத், 23, என்பது தெரி யவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ