உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கத்தியுடன் இருந்த வாலிபர் கைது

 கத்தியுடன் இருந்த வாலிபர் கைது

புதுச்சேரி: வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அரசூர் மயானம் பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியை வைத்து கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்குதகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து, கத்தியை பறிமுதல் செய்துவிசாரித்தனர். அவர், ஜி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவபாலன், 22,என்பதும், கத்தியை வைத்துக் கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை