உள்ளூர் செய்திகள்

 வாலிபர்  கைது

நெட்டப்பாக்கம்: பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மடுகரை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் காவாணிபாக்கம் பகுதியைச் சேர்ந்த அமுதன் 19, என்பவர் குடிபோதையில், மடுகரை வி.எஸ்.நகர் 2வது தெருவில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசிக் கொண்டு, இடையூறு ஏற்படுத்தி கொண்டிருந்தவரை ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ