மேலும் செய்திகள்
நெய்வேலி சப்த விநாயகர் கோவிலில் சதுர்த்தி பூஜை
09-Sep-2024
புதுச்சேரி: மத கூட்டங்களில் சபாநாயகர் பங்கேற்றதற்கு, புதுசேரி மாநில இளைஞர் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இளைஞர் காங்., மாநில தலைவர் ஆனந்த் பாபு நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி சபாநாயகர் செல்வம் நேற்று முன்தினம் நடந்த மதம் சார்ந்த கூட்டத்தில் கலந்து கொண்டது கண்டனத்திற்குரியது. இது மக்களாட்சி முறையையும், மதசார்ப்பற்ற பாரம்பரியத்தையும் கேள்விகுறியாக்கி உள்ளது.இது அவரது பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. சபாநாயகர் தன் கட்சி பணிகளையும் மேற்கொள்ளாமல், நடுநிலையாக எப்போதும் இருக்க வேண்டும். எம்.எல்.ஏ., க்களிடம் நம்பிக்கை பெறும் வகையில் சபாநாயகர் சார்பற்ற முறையில் செயல்பட வேண்டும். சபாநாயகர்கள் தங்களது கட்சியின் நிகழ்வுகளில் அல்லது அரசியல் செயலில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். ஆனால் புதுச்சேரி சபாநாயகர் மத கூட்டங்களில் கலந்து கொள்ளுவது ஏற்புடையது அல்ல. சபாநாயகர் உடனடியாக தனது பதவியில் இருந்து விலகி ஜனநாயகத்திற்கு எதிரான தனது செயலுக்கு மக்களிடம் விளக்கம் தர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
09-Sep-2024