உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் பஸ் மோதி வாலிபர் பலி

தனியார் பஸ் மோதி வாலிபர் பலி

புதுச்சேரி, : தனியார் பஸ் மோதி தனியார் பள்ளி உதவியாளர் இறந்தார்.ரெட்டியார்பாளையம், ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் சகாய செரக், 35; புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை பள்ளிக்கு வழக்கம்போல் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார்.உப்பனாறு பாலம் அருகே வந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அதே சாலையில் கனகசெட்டிக்குளம் நோக்கி சென்ற தனியார் பஸ்சின் பின் சக்கரம் சகாய செரக் இடுப்பு பகுதியில் ஏறி இறங்கியது. படுகாயமடைந்த அவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து புதுச்சேரி கிழக்குப்பகுதி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை