உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல்வேறு துறையினருக்கு இளைஞர் அமைதி மைய விருது

பல்வேறு துறையினருக்கு இளைஞர் அமைதி மைய விருது

புதுச்சேரி : பல்வேறு துறையினருக்கு இளைஞர் அமைதி மையத்தின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இது குறித்து புதுச்சேரி இளைஞர் அமைதி மைய நிறுவனர் அரிமதி இளம்பரிதி வெளியிட்டுள்ள அறிக்கை:இளைஞர் அமைதி மையம் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்கள், சமூக பணியாளர்களை தேர்வு செய்து, அரிமதி தென்னகன் விருது வழங்கி வருகிறது. இந்தாண்டு விருதிற்காக மாநில சாரணிய ஆணையர் சண்முகம், கலவைக் கல்லுாரி விரிவுரையாளர் அருள்மொழி, அரும்பார்த்தபுரம் திரு.வி.க. பள்ளி தலைமையாசிரியர் வாசு, சுத்துகேணி அரசு துவக்க பள்ளி ஆசிரியர் அந்தோணிசாமி, திருபுவனை அரசு துவக்க பள்ளி ஆசிரியர் சசிக்குமார் , கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் மனோகர், கொடாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மோகன்ராஜ், ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் ஜானகிராமன், போக்குவரத்து உதவி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, அரும்பாத்தபுரம் ரத்தின விநாயகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அடுத்த மாதம் நடக்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படும். ஏற்பாடுகளை முனைவர் கரிகாலன், அரிமதி இளவேங்கை ஆகியோர் செய்து வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை