மேலும் செய்திகள்
அழுகிய நிலையில் மூதாட்டி உடல் மீட்பு
11-Oct-2026
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நெட்டப்பாக்கம் அடுத்த மொளப்பாக்கம் கிராமத்தில் மாந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் 40 வயது மதிக்க தக்கவர் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக மடுகரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மா, சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின் மடுகரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்,எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
11-Oct-2026