மேலும் செய்திகள்
ஆசிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
13-Feb-2025
கிங்டாவோ: ஆசிய பாட்மின்டனில் (கலப்பு) இந்தோனேஷிய அணி கோப்பை வென்றது. பைனலில் 3-1 என சீனாவை வென்றது.சீனாவில், கலப்பு அணிகளுக்கான ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் பைனலில் சீனா, இந்தோனேஷியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இந்தோனேஷியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தோனேஷியா சார்பில் ரினோவ், சில்வா ராமதந்தி ஜோடி (கலப்பு இரட்டையர்), ஆல்வி பர்ஹான் (ஆண்கள் ஒற்றையர்), ஷோஹிபுல் பிக்ரி, டேனியல் மார்டின் ஜோடி (ஆண்கள் இரட்டையர்) வெற்றி பெற்றனர். சீன அணிக்கு சூ வென்ஜிங் (பெண்கள் ஒற்றையர்) ஆறுதல் தந்தார்.இந்தோனேஷிய அணி இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்று வரலாறு படைத்தது. இதற்கு முன் 2019ல் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றிருந்தது. சீனாவின் 'ஹாட்ரிக்' கோப்பை வெல்லும் கனவு தகர்ந்தது. அரையிறுதியில் தோல்வியடைந்த ஜப்பான், தாய்லாந்து அணிகள் வெண்கலம் கைப்பற்றின.
13-Feb-2025