பாட்மின்டன்: ஷ்ருதி, தான்வி வெற்றி
விஜயவாடா: தேசிய பாட்மின்டன் ஒற்றையரில் ஷ்ருதி, தான்வி பத்ரி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 87வது சீசன் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஷ்ருதி 21-14, 21-19 என ஜியா ராவத்தை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் தான்வி பத்ரி 22-20, 21-19 என, இஷாராணியை தோற்கடித்தார். மற்றொரு வீராங்கனை பருல் சவுத்ரி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.ஆண்கள் ஒற்றையரில் ஆர்யமான் டான்டன் 17-21, 21-11, 21-14 என ரகுவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் அபினவ் கார்க் 21-19, 21-16 என, அபினவ் தாகூரை வென்றார். ரித்விக் சஞ்ஜீவி 21-15, 21-19 என ஒரிஜித் சாலிஹாவை தோற்கடித்தார்.கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் நிதின் குமார், கனிகா ஜோடி 23-21, 21-15 என கெவின் வோங், பிரனவி ஜோடியை வீழ்த்தியது.