உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / அதிவேக வீராங்கனை சிந்து * இந்தோனேஷிய பாட்மின்டனில்...

அதிவேக வீராங்கனை சிந்து * இந்தோனேஷிய பாட்மின்டனில்...

ஜகார்த்தா: இந்தோனேஷிய பாட்மின்டனில் பந்தை அதிவேகமாக அடித்த வீராங்கனைகளில் சிந்து முதலிடம் பிடித்துள்ளார்.இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் சமீபத்தில் 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. உலகத் தரவரிசையில் 'நம்பர்-13' ஆக உள்ள இந்திய வீராங்கனை, ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சீனாவின் யு பெய் செனிடம் தோல்விடையந்தார். அப்போது யு பெய் சென் அடித்த பந்தை, சிந்து திருப்பி அனுப்பினார் ('ஸ்மாஷ்'). இதன் வேகம் 380.1 கி.மீ., ஆக பதிவானது. இதையடுத்து இந்தோனேஷிய பாட்மின்டனில் அதிவேகமாக பந்தை 'ஸ்மாஷ்' செய்த வீராங்கனை வரிசையில் சிந்து முதலிடம் பிடித்துள்ளார். தாய்லாந்தின் புசானன் (373.5), வியட்நாமின் நிகுயேன் லின் (354.2) அடுத்த இரு இடம் பிடித்தனர். அதிவேகமாக 'ஸ்மாஷ்' செய்ய வீரர்களில், இந்தியாவின் லக்சயா சென், 7வது இடம் பிடித்தார். இவர் அடித்த பந்து, 419.0 கி.மீ., வேகத்தில் திருப்பிச் சென்றது. முதல் 2 இடத்தில் தாய்லாந்தின் தீரரட்சகுல் (446.1, 441.5) உள்ளார். இந்தோனேஷியாவின் ஜியா ஹெங் (432.6) 3வது இடம் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ