பிரதான சுற்றில் மேஹனா * தென் கொரிய பாட்மின்டனில்...
சுவோன்: தென் கொரியாவில், 'சூப்பர் 500' சர்வதேச பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவின் மேஹனா ரெட்டி, ஜப்பானின் ரிரினா ஹிராமோட்டோவை சந்தித்தார். இதில் மேஹனா 21-19, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் மேஹனா, சீனா தைபேவின் பெய் சு செனை எதிர்கொண்டார். இதில் 21-6, 21-18 என எளிதாக வெற்றி பெற்ற மேஹனா, பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார். இதில் இன்று தாய்லாந்தின் சியாஹெங்கை எதிர்கொள்கிறார்.ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் ஷிவான்ஷ், 12-21, 21-17, 12-21 என்ற கணக்கில் சீன தைபே வீரர் லு வெய் ஹிசியனிடம் தோல்வியடைந்தார். ஆண்கள் இரட்டையர் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நிதின் குமார், ஹர்ஷ் ராணா ஜோடி, 11-21, 17-21 என சீன தைபேவின் பாவோ ஜின், யு சோவு ஜோடியிடம் தோல்வியடைந்தது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஷிவான்ஷ், பிரனவே ஜோடி 15-21, 6-21 என சீன தைபேவின் ஹூவாங், சியுவான் ஜோடியிடம் தோற்றது.