கனடா பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் ஏமாற்றம்
கால்கரி: கனடா ஓபன் பாட்மின்டன் அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் ஏமாற்றினார்.கனடாவில், 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோ மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்ரீகாந்த் 21-19, 14-21, 18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. ஏற்கனவே சங்கர் முத்துசாமி, பிரியான்ஷி தோல்வியடைந்தனர்.