உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / துருவ் கபிலா-தனிஷா ஜோடி விலகல்

துருவ் கபிலா-தனிஷா ஜோடி விலகல்

ஹோ சி மின் சிட்டி: வியட்நாம் ஓபன் பாட்மின்டன் அரையிறுதியில் இருந்து இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா ஜோடி விலகியது.வியட்நாமில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி, இந்தோனேஷியாவின் அத்னன் மவுலானா, சாரி ஜமீல் ஜோடியை எதிர்கொள்ள இருந்தது. ஆனால் துருவ் கபிலாவுக்கு உடல் நிலை சரியில்லாத (காய்ச்சல், முதுகு பிடிப்பு) காரணத்தினால் போட்டி துவங்குவதற்கு முன் இந்திய ஜோடி விலகியது. இதனையடுத்து இந்தோனேஷிய ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பைனலுக்குள் நுழைந்தது.கபிலா கூறுகையில், ''இத்தொடரின் துவக்கத்தில் இருந்தே எனது உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. காய்ச்சலை விட முதுகு பிடிப்பு பாதிப்பு தான் அதிகம். எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி இப்போட்டியில் இருந்து விலகினேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை