உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / ஜூனியர் பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா

ஜூனியர் பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா

கவுகாத்தி: உலக ஜூனியர் பாட்மின்டனில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற இந்தியா, காலிறுதிக்கு முன்னேறியது. நேற்று, யு.ஏ.இ., அணியை வீழ்த்தியது.அசாமின் கவுகாத்தியில், கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. மொத்தம் 36 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின. இந்திய அணி, 'எச்' பிரிவில் ஐக்கிய அரபு எமிரேட் (யு.ஏ.இ.,), இலங்கை, நேபாளம் அணிகளுடன் இடம் பெற்றிருந்தது.கடைசி லீக் போட்டியில் இந்தியா, யு.ஏ.இ., அணிகள் மோதின. இதில் இந்திய அணி 45-34 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஒற்றையரில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தன்வி சர்மா, சூர்யாக் ஷ் ரவாத் வெற்றி பெற்றனர். முதலிண்டு போட்டியில் நேபாளம், இலங்கையை வீழ்த்திய இந்தியா, 'ஹாட்ரிக்' வெற்றியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது.காலிறுதியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை