மேலும் செய்திகள்
ஜூனியர் பாட்மின்டன்: காலிறுதியில் தான்வி
16-Oct-2025
கவுகாத்தி: உலக ஜூனியர் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்திய வீராங்கனை தான்வி சர்மா முன்னேறினார்.அசாமின் கவுகாத்தியில், உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தான்வி சர்மா, சீனாவின் சி யா லியூ மோதினர். மொத்தம் 31 நிமிடம் நீடித்த போட்டியில் தான்வி 15-11, 15-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.இதன்மூலம் உலக ஜூனியர் பாட்மின்டன் அரங்கில், ஒற்றையர் பிரிவில் பைனலுக்கு முன்னேறிய 5வது இந்தியர், 3வது இந்திய வீராங்கனையானார் தான்வி 16. இதற்கு முன், அபர்ணா போபட் (1996), செய்னா நேவல் (2006, 2008), சிறில் வர்மா (2015), சங்கர் முத்துசாமி (2022) பைனலுக்குள் நுழைந்தனர்.
16-Oct-2025