மேலும் செய்திகள்
கொரிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
24-Sep-2025
கொரிய பாட்மின்டன்: சாதிப்பாரா பிரனாய்
22-Sep-2025
இந்தியாவுக்கு 4 தங்கம்: சீன பாரா பாட்மின்டனில்
21-Sep-2025
இந்திய ஜோடிக்கு வெண்கலம்: சீன பாரா பாட்மின்டனில்
20-Sep-2025
ஜகார்த்தா: இந்தோனேஷிய பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்றார்.இந்தோனேஷியாவில் 'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கான்டா சுனேயமா மோதினர். இதில் லக்சயா சென் 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சீனாவின் வெங் ஹாங் யாங் மோதினர். இதில் கிரண் 21-11, 10-21, 20-22 என தோல்வியடைந்தார். மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாய் 17-21, 12-21 என சகவீரர் பிரியான்ஷு ரஜாவத்திடம் தோல்வியடைந்தார்.கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுமீத் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி 18-21, 21-16, 21-17 என அமெரிக்காவின் வின்சன் சியு, ஜென்னி ஜோடியை வீழ்த்தியது. பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-15, 21-11 என சீனதைபேயின் செங் யு-பெய், சன் யு ஹசிங் ஜோடியை வீழ்த்தியது.
24-Sep-2025
22-Sep-2025
21-Sep-2025
20-Sep-2025